நாளை சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகலுக்குள் முடிவு தெரிய ஏற்பாடு
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என தலைமைத் தேர்தல் கொமிஷனர் குரேஷி கூறினார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் கொமிஷனர் குரேஷி டெல்லியில் நிருபர்களிடம் நேற்று விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, ஐந்து மாநில தேர்தலில், குறிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் நடந்திராத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 78.80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது 2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட 11.26 சதவீதம் அதிகம். மேற்கு வங்கத்தில் 84.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலைவிட 3.04 சதவீதம் கூடுதல். அதே போல் அசாமில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை காட்டிலும் 0.36 சதவீதம் அதிகம். கேரளாவில் 75.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 3.79 சதவீதம் அதிகம். புதுச்சேரியில் 85.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலைவிட சிறிய அளவில் தான் (0.13 சதவீதம்) அதிகம்.
அசாம் தவிர கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் பெண்கள் அதிகளவில் ஓட்டுப் போட்டு உள்ளனர். ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 839 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். பிற்பகலுக்கு முடிவுகள் தெரிந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கைக்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையில் 43 ஆயிரத்து 982 அதிகாரிகளும், பாதுகாப்புக்கு 17 ஆயிரத்து 700 பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் இந்த முறை அதிகளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் 8,820 வாக்காளர்கள் தாங்கள் வெளிநாட்டில் இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 4,639 பேர் ஓட்டளித்து உள்ளனர் என்று குரேஷி தெரிவித்தார்ர்

<< Home