இந்தியா அடைந்த தோல்வியை நினைவிலிருந்து அழிப்பது கடினம் – வாசிம் அக்ரம்
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 18 : டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விகளை இந்திய அணி நினைவிலிருந்து அழிப்பது மிகவும் கடினம் என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
பிசிசிஐ இந்தத் தொடரிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்றால் கிரிக்கெட் வாரியம் தன் நடைமுறைகளின் மீது உண்மையான ஆன்மப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா முதலிடத்தில் இருப்பது என்பது டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நாளைக்கு உயிர்வாழ உதவுவதாகும் என அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டுல்கர், டிராவிட், லஷ்மண், சேவாக்கிற்குப் பிறகு யார் என்பது இந்தியாவுக்கு ஒரு பெரிய கவலை என கூறியுள்ள,வாசிம் அக்ரம், சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, விராத் கோலி போன்றோர் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் எனக் தெரிவித்தார்.
சேவாக் கடந்த டெஸ்ட் போட்டியில் அதிசயம் நிகழ்த்திக் காட்ட விரும்பி ஆடினார் – ஆனால் விளைவு இரண்டு இன்னிங்ஸ்களிலும் முதல் பால் டக் அவுட்டாகிவிட்டார் என அக்ரம் குறிப்பிட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவு சுலபமானதல்ல – அதுவும் இங்கிலாந்து சூழ்நிலையில், 3 மாதங்களாக கிரிக்கெட் எதையும் ஆடாமல் நேராக டெஸ்டில் ஆடும்போது இன்னும் சற்று நேரம் களத்தில் செலவழித்திருக்கவேண்டும் – இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை – ஓவல் மைதானம் கிட்டத்தட்ட இந்திய மைதானங்களை போன்றதுதான் - இதில் சேவாக் தன் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கலாம் என்று அக்ரம் கூறினார்.

<< Home