பறிபோனது முதல் இடம்
பர்மிங்ஹாம், ஆகஸ்ட் 13: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் இதுவரை தக்கவைத்துக்கொண்டிருந்த முதல் இடத்தை இழக்கிறது. டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பெறுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி 2-என்று என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து “டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாளான இன்று ஆட்டத் தொடர்ந்த இந்திய அணி, முந்தைய நாள் ஸ்கோருடன், மேலும் ரன் எதுவும் எடுக்காத நிலையில் காம்பிர் (14), டிராவிட் (18) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. லட்சுமண் (2), ரெய்னா (10) ஆகியோரும் விரைவாக ஆட்டமிழந்தனர். சற்று நம்பிக்கை ஏற்படுத்திய சச்சின், 40 ரன்கள் எடுத்திருந்தபோது பரிதாபமாக ரன் அவுட்டானார்.
அமித் மிஸ்ரா, 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் “ஷார்ட் பிட்ச்’ பந்தில் வீழ்ந்தார். தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில் இஷாந்த் சர்மா, “டக்’ அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் குக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. மேலும் இந்த தோல்விகளின் மூலம் இந்திய அணி தரவரிசை பட்டியலில் இதுவரை தக்கவைத்துக்கொண்டிருந்த முதல் இடத்தை இழக்கிறது. டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பெறுகிறது.

<< Home