01/04/2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி டிக்கட் 1.25 லட்சத்திற்கு விற்பனை!

மும்பையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்விலை 1.25 

லட்ச ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் வரும் 2-ம் தேதி வாங்டே மைதானத்தில் உலககோப்பைக்கான இறுதிப்போட்டியில் இலங்கை-இந்திய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற பின்னர் இந்தியா கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. 

இதனால் ரசிகர்கள் போட்டியை நேரில் காண்பதற்கு பணத்தை தண்ணீராக செலவழிக்க தயாராக உள்ளனர். சாதாரண நிலையில் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் ஒன்றின்விலை 35 ஆயிரமாக இருந்தது. தற்போது எதிர்பார்ப்பு அதிகரிப்பு காரணமாக அதன் விலை ஒன்றேகால் லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.போட்டி நடைபெற ஒரு நாள் இடைவெளி இருப்பதால் டிக்கெட் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.