கௌதம் கம்பீர் மே.இந்திய தொடரிலிருந்து நீக்கப்படலாம்? : சுரேஷ் ரைனாவுக்கு கைமாறும் கேப்டன் பதவி
ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்ததும் மேற்கு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சுரேஷ் ரைனா கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் இடம்பெறும் மே.இந்திய தொடரில், ஷேவாக் உபாதை காரணமாகவும், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு கொடுக்கப்பட்டதன் காரணமாகவுவும் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய கேப்டனாக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் இப்போது அவர் இப்போது தோற்பட்டை வலிக்கு 6 வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் என கொல்கத்தா அணியின் மருத்து வாலோசகர் அண்ட்ரிவ் லெய்பஸ் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகத்தினருக்கும் இது தொடர்பில் முறையிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கம்பீரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தன்னிடம் ஆலோசிக்காமல், நேரடியாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு லெய்பஸ் முறையிட்டுள்ளார் எனவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கும் முடிவுக்கு அவர் தான் பதில் சொல்லியாக வேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையின் இறுதி போட்டியில் கம்பீருக்கு தோற்பட்டை வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

<< Home