10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: செய்யாறு மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
10 ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர், திருவண்ணாமலை, சென்னை, ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் இடத்தை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மதிப்பெண் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 494 மதிப்பெண்கள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மதிப்பெண்கள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டுரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500 க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் - 98, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் டொக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்தை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள், தமிழ் - 98, ஆங்கிலம் - 98, கணிதம் - 100, அறிவியல் -100, சமூக அறிவியல் - 100.
மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார்.
பாரதிய வித்தியாபவன் மெட்ரிக். பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த மார்ச், ஏப்ரலில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில் நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்.
நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல் ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

<< Home