13/05/2011

தமிழகத்தில் தோல்வி : ஊழலுக்கு கிடைத்த தண்டனையா? காங்கிரஸிடம் போட்டுத் தாக்கியது NDTV (வீடியோ)

தமிழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக கூட்டணிக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், திமுகவுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் ஓரளவு அனுமானித்ததே எனினும், தமிழ்நாட்டு தேர்தலில் திமுக : காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்திருப்பது, எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென என்.டி.டிவி செய்தி சேவை கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. எனினும் இத்தேர்தலில் திமுக தோல்வியடைந்திருப்பதற்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக வின் வெற்றிக்கு மதிப்பளிக்கிறோம் என்றார்.

ஊழலுக்கு சரியான தண்டனையை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? என ஜெயந்தியிடம் கேள்வி எழுப்பபட்ட போது அவர் அளித்த பதில்களை காண வீடியோவை அழுத்துங்கள்