11/06/2011

தேமுதிக பா.உறுப்பினர்களுக்கு பிளாக்பெரி செல்ஃபோன்களை வழங்கினார் விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று அவைத்தலைவர் பண்ருட்டி எஸ்.இராமச்ச்னதிரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் தேமுக சட்டமன்ற தலைவர், விஜயகாந்த், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 29 பேருக்கும் பிளாக்பெர்ரி (Blackberry) கைத்தொலைபேசிகளை வழங்கினார்.

மின்அஞ்சல் (email), வலைத்தளம் (website) இவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் உடனுக்குடன் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக இவற்றை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.