மும்பையை வீழ்த்தியது பெங்களூர் : இன்று சென்னையுடன் இறுதி போட்டியில் மோதுகிறது (ஓர் சிறப்பு பார்வை)
2011 ஐபிஎல் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை - பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மீண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளின் பலம், பலவீனம் பற்றியும் நேற்றைய அரையிறுதி போட்டி நிலவரம் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூர் அணி 43 ரன்களால் இலகுவெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல், நினைத்தபடியே விளாசித்தள்ளினார். அவர் 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள், 9 பவுன்றிகள் அடங்கும். மறுமுனையில் அகர்வால் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் அடங்கும்.
இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 10.4 ஓவர்களில் 113 ரன்களை அதிரடியாக எடுத்தனர். எனினும் அவர்கள் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய கோலி, போமெஸ்பாச், திவாரி ஆகியோர் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். வில்லியெர்ஸ் மட்டும் 15 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். ஆரம்ப அதிரடியை பார்த்ததும் மொத்த ரன்கள் 200 ஐ தாண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிநேர மும்பையின் சிறப்பான பந்துவீச்சினால் 185 ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்தது.
பந்துவீச்சில் முனாப் படேல் 2 விக்கெட்டுக்களையும் ஆஹ்மெட், பொலார்ட் தலா 1 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய சச்சின் தலைமையிலான மும்பை அணி ஆரம்பத்திலேயே ப்ளிஷார்ட்டை இழந்தது. அவர் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.டெண்டுல்கர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுன்றிகள் அடங்கும்.
எனினும் களமிறங்கிய மற்றவர்கள் எவரும் பிரகாசிக்க தவறியதால், 20 ஓவர்களில் 142 ரன்களையே அவ் அணி பெற்றுக்கொண்டது. ரோஹித் ஷர்மா, ராயுடு, பொலார்ட் என மும்பையின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுக்களை வெட்டோரி கைப்பற்றினார்.
ஹீர் கான் 1 விக்கெட்டையும், அரவிந்த், சியாத் மொஹெம்ட் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டிநாயகனாக கிரிஸ் கேய்ல் தெரிவானர். இப்போட்டியில் வென்றதன் மூலம் பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
பரிசளிப்பு விழாவில் கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் கேப்டன் வெட்டோரி, கிரிஸ் கேய்ல் தங்களுக்கு நல்லதொரு டானிக் மாதிரி. அவர் ஆரம்ப வீரராக களமிறங்கி கலக்க தொடங்கினால், எமக்கும் உற்சாகம் வந்துவிடும். ஆனால் எமது பந்துவீச்சாளர்களும் மிகத்திறமையானவர்கள். சஹீர் கான், அரவிந்த், சியாட் மொஹ்மட் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளை சென்னையையும் கலங்கடிக்க செய்வோம் என நம்புகிறோம் என்றார்.
ஹர்பஜன் சிங், மாலிங்க ஆகியோர் பந்துவீசும் போது மட்டும் கொஞ்சம் டென்ஷனானேன். மற்றும்படி இன்றைய ஆட்டம் எனக்கு மறக்கமுடியாதது தான் என்றார் கிரிஸ் கேய்ல்.
நாளை இறுதிப்போட்டியில் மோதும் சென்னை : பெங்களூர் அணிகள் பற்றிய பார்வை
73 போட்டிகளை கடந்து இறுதிப்போட்டியில் காலடி எடுத்துவைத்துள்ளது ஐபிஎல் பட்டாளம்! இது ஐபிஎல் 2011 இன் 74 போட்டி. மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் பலம்வாய்ந்த பெங்களூரை வீழ்த்தியே சென்னை இறுதிப்போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது. அந்த போட்டியில் கிரிஸ் கேய்லை 8 ரன்களுக்குள் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அஷ்வின்.
ஆனால் கேய்லின் ஆட்டத்தை விராத் கோலி தொடர்ந்தார். அவர் 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்து மொத்த ஓட்டத்தை 175 ரன்கள் வரை கொண்டுவந்துவிட்டார்.
பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி சுரேஷ் ரைனாவின் அதிரடியால் 19.4 பந்துகளில், போட்டியை வெற்றிகொண்டது. இதற்கு பழிதீர்க்கும் எண்ணத்தில் பெங்களூர் மீண்டும் சென்னையை சந்திக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, தனது அணியில் இன்னுமொரு வீரரை இடம்மாற்றாது, தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்றுள்ளது. அந்தளவுக்கு அவர்களுடைய டீம் ஸ்பிரிட்.
அந்த அணியின் அல்பி மோர்கெல், வேய்ன் பிராவோ இருவரும் நல்ல ஆல்ரவுண்டர்கள், சென்னை கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விடயம் ஆரம்ப துடுப்பாட்டம் தான். முதல் 6 ஓவருக்குள் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தும் அனுபவம் சென்னை அணிக்கு என கூறப்படுகிறது. சிலவேளை குறைவான ஓட்டம் எடுக்கின்றனர். அல்லது நேரத்திற்கே விக்கெட்டை இழந்துவிடுகின்றனர்.
பெங்களூரின் இடைநிலை துடுப்பாட்ட வீரர்களிடமும் இப்பலவீனம் காணப்படுகிறது.
இப்போட்டியில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கும் இரு வீரர்கள் சஹீர் கானும், சுரேஷ் ரைனாவுமே. கடந்த 2010 ஐபிஎல் போட்டிகளில், இறுதிப்போட்டியில் மும்பை சென்னை அணிகள் மோதின. அப்போது மும்பைக்காக விளையாடிய சஹீர் கான், சுரேஷ் ரைனாவின் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். இதை வாய்ப்பாக கொண்டு விளாசிய சுரேஷ் ரைனா சென்னைக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த கோபம் சஹீர்கானிடம் இன்றுவரை இருக்கிறதாம்.
நாளை பந்துவீச்சில் அதை பழிதீர்பாரா?
சுரேஷ் ரைனா இதுவரை நடந்த ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் தனது மொத்த ரன்களாக 400 ஐ கடந்துள்ளார். மூன்று ஐபிஎல் போட்டிகளில் கூட வேறு எவரும் தொடர்ச்சியாக 400 ஐ கடக்கவில்லை.
பத்ரினாத், தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி நல்ல ஸ்கோர் எடுத்துவருகிறார்.
எம்.எஸ் தோனி : 2007 நடைபெற்ற உலக டுவெண்டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தந்தார். ஐபிஎல் 2010 இல் சென்னைக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். 2010 சாம்பியன் லீக் கிண்ணத்தையும், 2011 உலக கோப்பையும் பெற்றுத்தந்தார். இப்போது மீண்டும் சென்னைக்கு 2011 ஐபிஎல் கோப்பையை பெற்றுக்கொடுப்பாரா?
கிரிஸ் கேய்ல் : இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை மேன் ஆஃப் தி மேட்ச் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவர் இம்முறை விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கையே 11 தான்.
பத்ரினாத் : இம்முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை ஐம்பது ரன்களை கடந்துள்ளார்.
இந்த ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் கலக்குவார்களா?, 2011 ஐபிஎல் கோப்பை யாருக்கு? உங்கள் ஊகம் என்ன? மறக்காமல் இங்கு கருத்து தெரிவியுங்கள்

<< Home