டோனிதான் உண்மையான கேப்டன்; விஜயகாந்த் அல்ல- நடிகர் வடிவேலு சொல்கிறார்
மானாமதுரை தி.மு.க. வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து நேற்று இரவு 9.30 மணிக்கு மானாமதுரை தேவர் சிலை அருகே நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்வர் கலைஞர் ஏழை மக்களை தன் பிள்ளைகளாக பாவித்து சலுகைகளை அள்ளி வழங்கி உள்ளார். தாய் வயிற்றில் வளரும் சிசுவுக்கு கூட மாதம் 1000 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். அவருடைய திட்டங்களில் கடந்த 5 வருடங்களில் ஏழை மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நான் கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் ஏமாற்றி வருகிறார். மேலும் அவர் தன்னை கேப்டன் என்று கூறி வருகிறார். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை வென்ற டோனிதான் உண்மையான கேப்டன். விஜயகாந்த் கேப்டன் அல்ல.
அவர் அப்படி கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். எனவே முதல்வர் கருணாநிதி நல்லாட்சி தொடர வேட்பாளர் தமிழரசியை வருகிற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மேலும் நடிகர் வடிவேலு பாட்டு பாடி தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார்.


<< Home