18/05/2011

விஸ்வரூபம் எடுத்தார் கில்கிரிஸ்ட் - ஹிமாலய பிரதேஷில் நடந்த போட்டியில், இமாலய வெற்றி பெற்றது பஞ்சாப்

ஹிமாலய பிரதேஷ், தர்மசாலாவில் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி 111 ரன்களால் பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது.


இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவென் அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 232 ரன்களை எடுத்தது. இதுவர சோபிக்க தவறிய, கேப்டன் அடம் கில்கிரிஸ்ட் தனது ஒட்டுமொத்த கோபத்தையும், இந்த ஒரே போட்டியில் காண்பித்துவிட்டார்.
அவர் தன்னந்தனியாக 55 பந்துகளில் 106 ரன்கள விளாசினார். இதில் 8 பவுன்றிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். ஷேர்ன் மார்ஷ் அவருடன் இணைந்து 49 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுன்றிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். பந்துவீச்சில், லாங்வெல்ட்ட் மாத்திரம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 121 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக் வில்லியெர்ஸ் 34 ரன்களை எடுத்தார்.
பந்துவீச்சில் சவ்லா 4 விக்கெட்டுக்களையும் ஹாரீஸ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் :

ஐ.பி.எல் போட்டி ஒன்றில் இரு துடுப்பாட்ட வீரர்கள் இணைந்து எடுத்த அதிகூடிய ரன்கள் 206 (கில்கிரிஸ்ட் : மார்ஷ்)

2011 ஐ.பி.எல் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை 232. முன்னதாக டெல்லி அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் எடுத்திருந்தது.