13/05/2011

வடிவேலுவின் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு!

தேர்தல் பிரசாரத்தின் ‌போது தி.மு.க., வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இன்று காலை முதல் மதுரை சத்ய சாய நகரில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், அவர்பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் காலத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன், தேமுதிக தலைவர் விஜகாந்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், நடிகர் வடிவேலுக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இருதரப்பிலும் கோர்ட்டுக்கும் சென்றனர்.சட்டமன்ற தேர்தலிலும் மோதல் எதிரொலித்தது. இந்நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரத்தில் குதித்தார்.  கூட்டங்களில் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசினார். விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதிக்கும் சென்று அவரை திட்டி தீர்த்தார். வடிவேலு பிரசாரத்தில் பெரும் கூட்டம் கூடியது. ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் திரண்டனர். பெரும் தலைவர்களுக்கு இணையாக அவருக்கு கூட்டம் வந்தது. சுற்றுப்பயணம் முடிந்ததும் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போ அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் வீட்டில் இல்லை எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. விஜயகாந்த் ரசிகர்களால் வடிவேலு வீடு தாக்கப்படலாம் என செய்தி பரவியது. இதையடுத்து வட பழனி லோகையாகாலனியில் உள்ள அவரது வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தெருவில் இருபுறமும் போலீசார் நின்று அந்த வழியாக வருவோர், போவோரை நிறுத்தி விசாரித்து அனுப்புகின்றனர்.