13/05/2011

தமிழக முதல்வராக எதிர்வரும் 15ம் திகதி பதவியேற்கிறார் ஜெயலலிதா!

தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கும் அ.தி.மு.க சார்பில், ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். எதிர்வரும் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இப்பதவி ஏற்பு வைபவம் இடம்பெறுகிறது.
இன்று நண்பகல் 12.50 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா, கார்டனில் குவிந்திருந்த ஆதரவாளர்களை பார்த்து கை அசைத்து வெற்றியை பகிர்ந்துகொண்டார்.

 எனினும் சிறிது நேரத்தில் அவர் உள்ளே சென்றுவிட்டார். இதுவரை வெளிவந்த முன்னணி நிலவரங்கள் படி, அதிமுக 198 இடங்களில் முன்னிலையில் இருப்பதுடன், திமுக 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

 இதேவேளை தமிழக தேர்தலில் அதிமுக : தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பகிர்ந்துகொண்டார்.

இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. இதன் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்கள் அனுபவித்து வந்த பிரச்சினைகள் இனி மெல்ல மெல்ல குறைய தொடங்கும் என கூறினார். ஸ்பெக்ரம் வழக்கு திசை மாறு. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


போயஸ் காடன் படம் : த ஹிந்து