14/05/2011

புனித ஜார்ஜ் கோட்டையில் பெயர்ப் பலகை மாற்றம்!

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கவுள்ள நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்த பெயர்ப் பலகை மாற்றப்பட்டு, தலைமைச் செயலகம் பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

 
 
புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பழைய சட்டசபை வளாகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்துகொண்டு வருகிறது. சட்டசபை நடக்கும் அசெம்ளி ஹாலில் வைக்கப்ப்ட்டிருந்த நூல் நிலையம் அவசரம் அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு அமைந்திருந்த முதலமைச்சர் அறை உட்பட, மற்ற அமைச்சர்களின் அறைகளும் வேக வேகமாக சீர் செய்யப்பட்டு புதுக்கோலம் பூண்டு வருகின்றன. புதிய தலைமைச் செயலகத்திலிருந்து மேஜைகளும், நாற்காலிகளும் பழைய தலைமைச் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக கிடைத்த தகவலின்படி, புனித ஜார்ஜ் கோட்டையில் ”செம்மொழி தமிழாய்வு மையம்” பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளது. “தலைமைச் செயலகம்”  பெயர்ப் பலகை மீண்டும் கோட்டையில் பொறுத்தப்பட்டுள்ளது.