நடிகர் ரஜினிகாந்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்
நடிகர் ரஜினிகாந்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில்
உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினியின் குடும்பத்தினர் அவரது அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
அவரை சில தினங்களுக்கு முன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். இந் நிலையில் இன்று ரஜினியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
இச் சந்திப்பின் போது,, விஜய்காந்துடன் அதேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், கேப்டன் டிவி நிர்வாக இயக்குநர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர்
இது இவ்வாறிருக்கக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவலை தெரிவித்தார். ரஜினியை நேசிப்பவர்கள் அனைவருக்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியிடம் பேசினேன். அவரது மனைவியை தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறேன். ரஜினி படிப்படியாகக் குணமடைந்து வருவதாக எஸ்எம்எஸ் மூலம் அவர் தகவல் தெரிவித்தார். கூடியவிரைவில் ரஜினி குணமடைய பிரார்த்திப்போம் என அமிதாப் பச்சன் குறிப்பிட்டார்.

<< Home