18/05/2011

ரஜினியை நெருக்கும் உறவுகள் - நாளை விடீயோவில் பேசுகின்றார்!

ரஜினிக்கு தரப்பட்டு வரும் சிகிச்சைகள்  பற்றிய தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையில் இருந்து வெளியாகி விடுவதால் மீடியாவில் ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமாக செய்தி வெளியிட்டு வருவதில் ரஜினிக்கு இப்போது உறவுகளீடமிருந்து நெருக்குதல் ஏற்பட்டிருகிறது என்கிறார்கள் ரஜினியின் தலைமை மன்ற வட்டாரத்தில். நேற்று முழுவதும் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனுஷும், சௌந்தர்யாவின் கணவர் அஸ்வினும் ரஜினியால் அழைக்கப்பட்டு ரஜினியே அவர்களிடம் சொத்துக்கள் குறித்து விவாதித்தாகவும், அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லை மாமா என்று இருவரும் சொத்து பத்தி பேசவேண்டாம். மீடியாவுக்கு நாமே தீனி போட்டமாதிரி ஆகிவிடும். நீங்கள் பதட்டபடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.