28/08/2011

இந்தியாவின் படுதோல்வி மோசமானது – பிரெட் லீ

மும்பை, ஆகஸ்ட் 27 : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அடைந்த படுதோல்வி மோசமானது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான வொயிட் வாஷ் படுமோசமானது என்றும்,  இது இந்தியாவை புண்படுத்தும் எனவும் பிரெட் லீ கூறினார்.
இங்கிலாந்து அணி தாய்நாட்டு சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டதாக பிரெட் லீ தெரிவித்தார்.
இங்கிலாந்தின் ஸ்விங் பவுலிங்கை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று குறிப்பிட்ட பிரெட் லீ, ஆஷஷ் தொடரில் தங்கள் அணி இதனை சந்தித்ததாக கூறினார்.

இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று பிரெட் லீ  தெரிவித்தார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அடிக்கடி காயத்தால் அவதிப்படுவது குறித்து பிரெட் லீ –யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினமானது என்றும், உடல் தகுதியுடன் இருக்க அதிகம் உழைக்க வேண்டும் எனவும் பிரெட் லீ தெரிவித்தார்.