29/08/2011

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என இயக்குனர்
எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் இயக்கம், நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகரன்,

டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்ததார். மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமென விஜய்யிடன் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனை விஜய் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். அதிமுகவுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளதால், அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலி போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.