ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி
காலே, செப்டம்பர் 3 : காலேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 273 ரன்களும், இலங்கை 105 ரன்களும் எடுத்தன.
பின்னர் 2 – வது இன்னிங்சை ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இலங்கை அணிக்கு 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
ஜெயவர்த்தனே 57 ரன்களுடனும், மேத்யூஸ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4 – வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஜெயவர்த்தனேவும், மேத்யூசும் பொறுப்புணர்வுடன் விளையாடி இலங்கை அணியின் ரன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தினர்.
தோல்வியைத் தவிர்த்து இலங்கை அணியை வெற்றிப்பாதையில் நடைபோடச் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் அவர்கள் இருவரும் ஆடினர்.
மகிளா ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
அதன்பின்னர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாத அவர் 105 ரன்களில் (231 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) அவுட்டானார்.
மறுமுனையில் நன்கு விளையாடிக் கொண்டிருந்த மேத்யூஸ் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் இலங்கை அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 253 ரன்கள் ஆட்டமிழந்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் 4 வீரர்கள் ரன் எடுக்காமலேயே அவுட்டாகினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ரியான் ஹாரிஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான 2 – வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேவில் வரும் 8 – ம் தேதி தொடங்குகிறது.

<< Home