விஜயகாந்தை விமர்சித்த வடிவேலுவுக்கு ராதாரவி காட்டமான கேள்வி!
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பசாமியை ஆதரித்து நடிகர் ராதாரவி திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நடிகர் விஜயகாந்த் ஒரு அப்பனுக்குப் பிறந்தவர். அதனால் துணிச்சலாக ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். ஆனால் அவரை நடிகர் வடிவேல் கண்டபடி விமர்சிக்கிறார். தைரியமிருந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டுப் பார்.
நடிகர் விஜயகாந்தை விமர்சிக்கும் வடிவேலு
திருமணம் ஆகாமலேயே குழந்தை பெறுவதில் தவறு இல்லை என நடிகை குஷ்பு பேசியதால் அவரது வீட்டிற்கு வாரியலுடன் சென்று போராட்டம் நடத்தியவர்கள்தான் பாமகவினர். ஆனால் இன்று அவர்களுடன் சேர்ந்து குஷ்பு பிரசாரத்திற்கு வருகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களுக்கு எண்ணற்ற இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க, காவல்துறையினர் தலை நிமிர்ந்து நடக்க அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். அவருடன் சங்கரன்கோவில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
