24/05/2011

திமுகவின் முறைகேடான சொத்துக்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா

 



திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியி்ல் கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார். தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது.

தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர். பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும்.

பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார். தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

கனிமொழி பெண் என்பதால் சலுகை காட்டக்கூடாது - ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெண் என்பதற்காக 2G வழக்கில் சலுகை வழங்கக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

 
கனிமொழியின் வக்கீல் ராம் ஜேட்மலானி,கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட செயல்பாடுகளில் கனிமொழி நேரடியாகத் தொடர்பில்லை என்பதாலும் அவர் ஓர் பெண் என்பதாலும் அவருக்கு பிணை வழங்கும்படி கோரி இருந்தார்.

கனிமொழி ஓர் பெண் என்பதற்காக சலுகை கோருவது தவறான வாதமாகும். இதே காரணம் பிற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும்" என்று செய்தியாளர்களிடையே பேசும்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இறுதியாக 2G வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தவற்றில் பெரும்பாலான திட்டங்கள் குறித்து ஜூன் - 3 ஆம் தேதி அன்று ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும், முந்தைய திமுக அரசின் உயிர்காக்கும் திட்டம், இலவச வீட்டுமணை மற்றும் பறக்கும் ரயில் குறித்த திட்டங்களை அமைச்சரவை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

ரஜினியை நலம் விசாரிக்க வடிவேலுவுக்கு அனுமதியில்லை?!

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை நலம் விசாரிக்க சென்ற திமுக தேர்தல் பிரச்சாளரும், நகைச்சுவை நடிகருமான வடிவேலுவுக்கு, ரஜினியை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனை வளாகத்து பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தியதாகவும், பெரிய பெரிய ஆளுகளுக்கே அனுமதி கொடுக்கவில்லை. உங்களுக்கு எப்படி முடியும் என கேள்வி கேட்டு அவரை திருப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2011 Over The Limit Part-01


2011 Over The Limit Part-02


2011 Over The Limit Part-03


2011 Over The Limit Part-04

2011 Over The Limit Part-05

2011 Over The Limit Part-06

2011 Over The Limit Part-07


2011 Over The Limit Part-08