இந்திய - மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்
3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக டேரன் சேமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
2009-ம் ஆண்டு மோசமான பிட்ச் காரணமாக ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டெல்லி ஆடுகளத்தில் தடை காலம் முடிந்த பிறகு சில சர்வதேச ஒரு நாள் போட்டிகள் நடந்தன. ஆனால் தடை சம்பவத்திற்கு பிறகு அங்கு டெஸ்ட் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த பிட்ச்சின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உன்னிப்பாக கவனிக்க உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த தொடரை பொறுத்தவரை, இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது டெஸ்ட் சதத்தை (இதுவரை டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 48 சதம்) எட்டுவாரா? என்பது தான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
இங்கிலாந்து மண்ணில் ஏமாற்றிய டெண்டுல்கர், சொந்த மண்ணில் சாதிப்பார் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தொடர் குறித்தும், டெண்டுல்கரின் சாதனை குறித்தும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்காளதேச தொடரை விளையாடி விட்டு இங்கு வந்துள்ளோம். இந்த தொடரில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். டேரன் பிராவோ, கிர்க் எட்வர்ட்ஸ் மற்றும் டேரன் சேமி போன்றோர் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அசத்தினர். ஆனால் இந்திய தொடர் முற்றிலும் வித்தியாசமான சவாலாகும்.
இந்திய அணி இப்போது நம்பர் ஒன் இடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் அந்த அணி முன்னணி இடத்தில் உள்ளது. வலுவான துடுப்பாட்ட வரிசையை கொண்டிருக்கிறது. இளம் வீரர்களுடன் அனுபவம் வாய்ந்த சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், ஷேவாக் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
எனவே வலுவான இந்திய அணியை வீழ்த்த நாங்கள் அனேகமாக 7 பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டி இருக்கும். வங்காளதேச தொடரில் கிடைத்த வெற்றியின் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. வங்காளதேச தொடர் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்திருந்தது. இந்தியாவில் உள்ளது போன்ற சீதோஷ்ண நிலை தான் அங்கும் இருந்தது.
எனவே இங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை எளிதாக மாற்றிக் கொண்டு இருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர்கள் டேரன் சேமி, பிடெல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் ஆகியோர் கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வேகப்பந்து வீச்சு தான் எங்களது பலம். இந்திய துடுப்பாட்ட வரிசையை அவர்கள் சீர்குலைப்பார்கள் என்று நம்புகிறோம்.
ஆனால் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. புதிய பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆகாது. எனவே களத்தில் வித்தியாசமான யுக்தியை கையாள வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டும். டெண்டுல்கரின் புதிய சாதனை (100-வது சதம்) குறித்து எனக்கு தெரியாது.
அது பற்றி நான் அதிகமாக சிந்திக்கவும் இல்லை. ஆனால் அவர் சாதனை குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உருவாக்கினால், அது நிச்சயம் டெண்டுல்கருக்கு கடினமாகத்தான் இருக்கும். இருப்பினும் டெண்டுல்கர் ஒரு ஜாம்பவான். எப்படியென்றாலும் விரைவில் அவர் இந்த சாதனையை படைத்து விடுவார் என்றார் கிப்சன்.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராம்பால் கூறுகையில், `டெண்டுல்கர் தனிப்பட்ட முறையில் சாதனையின் விளிம்பில் இருக்கிறார் என்பதை அறிவோம். ஆனால் எங்களது இலக்கு சிறந்த கிரிக்கெட் விளையாட வேண்டும். ஆட்ட திட்டத்திற்கு ஏற்ப களத்தில் செயல்பட வேண்டும் என்பது தான்' என்றார்.