05/04/2011

பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?

சிலநேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து வரமுன் காப்பதற்கு
சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விடயங்கள் ஆகும்.

1. பாஸ்வேர்ட் பாதுகாப்பு

பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் கடினமானதாகவும் வேறு தளங்களில் பாவிக்காத பாஸ்வேர்ட்களாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள்.

2. பிரைவட் பிரவுஸிங்க்

பேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள் (முடிந்தால் கணிணியை அணைத்து விடுங்கள்) . இன்ரநெற் சென்டர்களாயின் இது மிக முக்கியம்.  Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு

பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள் ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு பாஸ்வேர்ட்டை எப்போதும் தருவதே நல்லது.
4.பாதுகாப்பு கேள்விகள்

பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும். எனினும் இவற்றில் எப்போதும் கடினமான கேள்வி பதில்களை தேர்வு செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது. இதுவரை கேள்வி பதில்களை செட் செய்ய வில்லையாயின் Account Settings page சென்று அவற்றை உருவாக்கி கொள்வதே நல்லது.
5. எப்போதும் facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புக்களில் லாகின் செய்ய வேண்டாம்.

6. மேலும் புதிய பாதுகாப்பு விடயங்களை உடனே அறிந்து கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்

http://www.facebook.com/security

மருத்துவ மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது : அமைச்சர் பொன்முடி

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது . இதில் அ.தி.மு.க. சார்பில் சி.வி. சண்முகம், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று பேசினார். இதற்கு அமைச்சர் பொன்முடி, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய மந்திரி கபில்சிபல் மாநில அரசுகளை கலந்து பேசாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அறிவித்திருக்கிறார். சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும் அழைத்து பேசி இருக்கிறார்.அப்போது நுழைவுத் தேர்வு வராது என்று உறுதி அளித்துள்ளார். எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது என்று தெரிவித்தார்.

செஞ்சுரி அடித்தும் அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் ஜெயவர்த்தனே.

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் கண்டும் கூட அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் என்ற பெயர் இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனேவுக்குக் கிடைத்துள்ளது.

 இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் அந்த அணியை வெற்றி பெற வைத்ததுதான் வரலாறாக இருந்தது. ஆனால் அந்த வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் ஜெயவர்த்தனே.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெயவர்த்தனே 103 ரன்களைக் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். இவரது ஆட்டம் காரணமாகவே இலங்கை அணியால் 274 ரன்களைக் குவிக்க முடிந்தது.

ஆனால் இவரது சதம் பயன்படாமல் போய் விட்டது. டோணியும், கம்பீரும் சேர்ந்து செய்த ரகளையில் இலங்கை அணி சின்னாபின்னமாகி விட்டது. ஜெயவர்த்தனேவின் சதம் கேட்பாரற்றுப் போனது.

ஒரு இறுதிப் போட்டியில் வீரர் ஒருவர் சதம் அடித்தும் அவரது அணி தோற்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 1975 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய வீரர் கிளைவ் லாயிட் சதமடித்தார். 79 போட்டியில் ரிச்சர்ட்ஸ் சதமடித்தார். 1996ல் அரவிந்த டிசில்வா சதமடித்தார். 2003ல் ரிக்கி பான்டிங்கும், 2007ல் கில்கிறைஸ்ட்டும் சதம் போட்டனர். அந்த சமயத்தில் எல்லாம் அந்த அணிகளே வென்றன.

ஆனால் இப்போது முதல் முறையாக ஜெயவர்த்தனே சதமடித்தும் இலங்கையால் வெல்ல முடியாமல் போய் விட்டது.

இதன் மூலம் சதம் அடித்தும் அணியை வெற்றிக்குக் கொண்டு போக முடியாமல் போன வீரர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார் ஜெயவர்த்தனே.

இறுதிப் போட்டியில் டோணி சிக்ஸர் விளாசிய பந்து ரூ. 21 லட்சத்துக்கு ஏலம்



டெல்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த ரன்னை எடுக்க கேப்டன் டோணி அதிரடியாக சிக்ஸருக்கு விளாசிய பந்து தற்போது ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை இடையிலான இறுதிப் போட்டியின்போது போட்டியை அட்டகாசமான சிக்ஸர் அடித்து முடித்தார் டோணி. அபாரமாக அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் மூலம் இந்திய ரசிகர்கள் 2வது உலகக் கோப்பையை தட்டிச் சென்றனர்.

இந்தப் பந்துதான் தற்போது ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களை தனது இணையதளம் மூலம் ஐசிசி ஏலத்தில் விடுகிறது. அதில் உலகக்கோப்பைப் போட்டியின் முக்கியப் பொருட்கள் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று இந்த பந்து. இப்பந்தை அதிகபட்சமாக ரூ. 21 லட்சத்திற்கு ஏலம் கேட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 52 பேர் ஏலம் கேட்டுள்ளனர். அதில் இதுதான் அதிகபட்ச தொகையாகும். இந்த ஏலம் ஏப்ரல் 6ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது.

அதேபோல இறுதிப் போட்டியின்போது டாஸ் போடப் பயன்படுத்தப்பட்ட நாணயமும் ஏலம் விடப்பட்டது. அது ரூ. 11.5 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதுவும் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நாணயத்தை 62 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட்கள், உலகக் கோப்பையின் மாதிரி கோப்பை உள்ளிட்டவையும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா வென்ற உலகக் கோப்பையின் மாதிரிக் கோப்பையின் விலை 79 டாலராகவும், கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்கள் 499 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கேப்டன் டோணி கையெழுத்திட்ட லித்தோகிராப் 199 டாலருக்கு வைக்கப்பட்டடுள்ளது.

ஐசிசி நடத்தும் இந்த ஏலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்டு, இ பே ஏலம் மூலம் 50,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது நினைவிருக்கலாம்.

2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்-அயர்லாந்து கண்டனம்


லண்டன்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முடிவடைந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்று அயர்லாந்து. வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்து ஆப்படித்தது அயர்லாந்து.
ஆனால் அயர்லாந்து போன்ற அணிகளின் வருகையை ரசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளிட்ட சிலர் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த குட்டி அணிகளை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவு வந்துள்ளது. இதற்கு அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அதிருப்தி 
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இது மிகவும் அவமானமாக இருக்கிறது. வளரும் அணியான எங்களை அவமானப்படுத்தியுள்ளது ஐசிசி.

ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்பது புரியவில்லை. நாங்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியை விட மேலே, 10வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் மேலும் வளர மாட்டோம் என்று கூற எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வளர வாய்ப்பே தராமல் இப்போது கதவை மூடி விட்டது ஐசிசி. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். இங்கிலாந்தை தோற்கடித்தோம். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே விரைவான செஞ்சுரியை அடித்தது எங்களது அணிதான். ஆனால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வரும் எங்களுக்கு வாசலை அடைத்து விட்டனர். இது என்ன நியாயம் என்று குமுறலோடு பேசினார் போர்ட்டர்பீல்ட்.

டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குட்டி அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி கூறியிருப்பதையும் ஆட்சேபித்துள்ளார் போர்ட்டர்பீல்ட். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. அனைவருக்குமே ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்குமே தவிர டுவென்டி 20 உலகக் கோப்பை நிச்சயம் கனவாக இருக்க முடியாது.

மேலும் ஐசிசியின் இந்த முடிவால் உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பல நாடுகள் இப்போது பெருகியுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் பின்வாங்கும் நிலை உருவாகும்.

அயர்லாந்து மட்டுமல்ல, கனடா, ஹால்ந்து உள்ளிட்ட நாடுகளும் கூட ஐசிசியின் இந்த முடிவால் அப்செட் ஆகியுள்ளன என்றார்.

அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி வாரன் டியூட்ரம், ஐசிசியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு கடும் கோபத்தை கொடுப்பதாக உள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது மிகப் பெரிய துரோகச் செயலாகும். உலக்க கோப்பையில் அயர்லாந்து மிக அருமையாக விளையாடியது. பெரிய நாடுகளுடன் மோதி அவர்களை திணறடித்தது. இதை யாரும் மறந்து விடக் கூடாது.

உலகின் மிகச் சிறந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.