15/04/2011

wwe micheal cole vs jerry the king lawler at wrestlemania 27


இன்று தான் உலகின் மிகப்பெரும் பயணிகள் கப்பலான 'டைட்டானிக்' அட்லாண்டிக் கடலில் மூழ்கியது!

இன்றைய ஏப்ரல் 15ம் திகதி உலகின் மறக்க முடியாத, மாபெரும் மனித அனர்த்தம் இடம்பெற்ற நாளாகும்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக இன்று வரை சாதனை படைத்திருக்கும் 'டைட்டானிக்' பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் 1,513 பயணிகளுடன் நீரில் மூழ்கிய தினம் 1912ம் ஆண்டு இதே ஏப்ரல் 15ம் திகதி தான்.

நியூயோர்க்கின் சௌதம்டோன் துறைமுகத்திலிருந்து, 46,000 டொன் நிறையுடன் புறப்பட்ட இப்பயணிகள் கப்பல் ஏப்ரல் 14ம் திகதி 23.40 மணியளவில் பனிப்பாறையும் மோதி விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கத்தொடங்கியது.

நள்ளிரவு கடந்து ஏப்ரல் 15ம் திகதி அதிகாலை, கப்பல் முற்றாக மூழ்கத் தொடங்க, கேப்டன் எட்வார்ட் ஸ்மித்தின் உத்தரவுக்கு அமைய, உயிர்காக்கும் அவசர படகுகளில் பெண்களும், குழந்தைகளும் முதலில் ஏற்றப்பட்டு கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

20 உயிர்காப்பு படகுகளே இவ்வாறு செயற்பட்டிருந்தன. 1,178 பேர் இப்படகுகளில் மூலம் தப்பிக்க முனைந்தனர். எப்படியும் கரையை அடைந்துவிடலாம் எனவும் நினைத்தனர். ஆனால் விதி இறுதியில் உயிர்பிழைத்தது வெறும் 711 பேர் தான். அதில் 60% வீதத்தினர் முதற்தர வகுப்பில் பயணம் செய்த பணக்காரர வர்க்கத்தினர்.

இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'டைட்டானிக்' திரைப்படம் வெளிவந்த போது உலக மகா வரவேற்பை பெற்றதுடன் ஆஸ்கார் விருதுகளையும் அள்ளிக்குவித்திருந்தது நினைவிருக்கலாம்.

சவூதியில் பயங்கர புழுதிக்காற்று! வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ரியாத்: சவூதி தலைநகர் ரியாதில் இன்று மாலை 5 மணி முதல் கடுமையான புழுதிக்காற்று வீசத்தொடங்கியது காற்று வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் ரியாத் முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்து வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் காய்கறி கடைகள் நடத்துபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்கள் முன் செல்லும் கார்கள் புலப்படாத அளவுக்கு புழுதி அடர்த்தியாக காட்சியளிக்கிறது. மக்கள் புழுதிகாற்றிலிருந்து தங்களை பாதுகாக்க முகத்தில் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள்.
இது போன்ற புழுதிப்புயல் வீசுவது அரபுநாடுகளில் இயல்பான ஒன்று என்றாலும் மற்ற நாட்டவர்களுக்கு இது புதுமையான அனுபவமாகவும் ஆஸ்துமா போன்ற மூச்சிறைப்பு நோய் உள்ளவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தை தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.