12/06/2011

இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது

இந்திய : மே.இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலகுவாக வெற்றி பெற்றது.

 இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 225 ஓட்டங்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய ரஸ்ஸெல் 84 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். சர்வான், 28 ஓட்டங்களையும் சைமன்ஸ் 45 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் முனாப் படேல், மிஷாரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ரோஹித் ஷர்மா 86 ரன்களையும் பார்திவ் படேல் 46 ரன்களையும் எடுத்தனர்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

தமிழக சட்டசபை தீர்மானம் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆறுதலான விடயம்! : நடிகர் விஜய்

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் ஜெயலிதாவுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையால் போர்க் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம்.

இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோஷத்தோடும் சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.