09/05/2011

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஓசூர் மாணவி மாநிலத்திலேயே முதலிடம்!

இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில், ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவி ரேகா,மாநிலத்திலேயே முதல் ராங்க் பெற்றுள்ளார். இவர்  1,190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. வழக்கம்போல் மாணவர்களைவிடவும், மாணவியர்கள் அதிக விழுக்காட்டில் தேர்ச்சியாகியுள்ளனர். மாணவர்கள் 82 விழுக்காடும், மாணவியர்கள் 89 விழுக்காடுகளும் தேர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வினை 7,81,395 பேர் எழுதியுள்ளனர். இதில் 6,15,593 பேர் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு 85.9 விழுக்காடு தேர்வாகியுள்ளனர்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவி ரேகா 1,190 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக தேர்வு பெற்றுள்ளார். இவர் வாங்கியிருக்கும் மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ் 195, ஆங்கிலம் 195, கணிதம் 200, வேதியல் 200, இயற்பியல் 200, உயிரியல் 200.  ஆக மொத்தம் 1,190.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவன் வேல்முருகன், மாநிலத்திலேயே 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை 4 பேர் பகிர்ந்து கொள்கிறார்கள். கள்ளக்குறிச்சிஐச் சேர்ந்த இன்னொரு மாணவன் கோகுலகிருஷ்ணன் தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார்.

200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் விபரம்: கணிதத்தில் 2720 பேர், தாவிரவியலில் 14 பேர், வணிகவியலில் 1167 பேர், வணிக கணிதத்தில் 358 பேர்,வேதியலில் 1243 பேர், இயற்பியலில் 646 பேர்,உயிரியலில் 615 பேர், கணணி அறிவியலில் 223 பேர். விலங்கியலில் யாரும் 200க்கு 200 எடுக்கவில்லை.

பிளஸ்டூ ரிசல்ட் வெளியீடு-ஓசூர் மாணவி ரேகா முதலிடம், கள்ளக்குறிச்சி வேல்முருகன் 2வது இடம்

  சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.

2வது இடத்தில் வேல்முருகன்

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி, ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.