27/05/2011

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் பேட்டி

இன்று காலை 10.00 மணியளவில் வெளிடப்பட்ட, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு) முடிவுகளின் படி  மாநில அளவில்  ஐந்து மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.

அவர்கள் பெயர் விவரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.  தாம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் ஊடகங்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.

தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.ரம்யா தெரிவிக்கையில்


மாநிலத்தில் முதலிடம் பெறவேண்டும் என்றுதான் படித்து வந்தேன். தினமும் அதிகாலை 4 மணி மணிக்கு எழுந்து 7 மணி வரை படிப்பேன். இரவு 7 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். ஆசிரியர்களிடம் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது கேட்டு படித்து வந்தேன்.

டி.வி.யில் செய்தி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டும் பார்ப்பேன். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன். நான் மதிப்பெண்களுக்காக பாடத்தை படிக்காமல் அதனை புரிந்து கொண்டு படித்து வந்தேன்.

இது மேல்படிப்புக்கும் உதவியாக இருக்கும். நான் எல்லா பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்து வந்தேன். வருங்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

அவர் எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் -98 ஆங்கிலம் -99 கணிதம் -100 அறிவியல் -99 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை சிவக்குமார் தனியார் மில்லில் சூப்பர்வைசராக உள்ளார். தாய் சாரதா. இவர்கள் நம்பியூரில் வசித்து வருகிறார்கள்.


மாணவி நித்யா தெரிவிக்கையில்



எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 496 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு 10 மணி வரையும் படிப்பேன். டி.வி. அவ்வப்போது பார்ப்பேன். என் படிப்புக்கு பெற்றோர் ஊக்கமளித்தனர். அதுபோல எனது பள்ளி தலைமை ஆசிரியர் எக்ஸ்பெடிக் (பொறுப்பு), ஆசிரியை ரோஸ்லின் ஆகியோர் எனக்கு நல்ல ஊக்கமளித்தனர். பாடங்களில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே ஆசிரியையிடம் கேட்டு அதை தீர்த்து கொள்வேன்.

பிளஸ்-2 தேர்விலும் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி எடுப்பேன்.   நான் டாக்டருக்கு படித்து கிராம புறங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்வேன் இவ்வாறு அவர் கூறினார்.

அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் -98 ஆங்கிலம் -98 கணிதம் -100 அறிவியல் -100 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை முருகேசன். இவர் ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தாயார் காந்திமதி. மாணவி நித்யா மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

மாணவி ஹரிணி தெரிவிக்கையில்

இரவு 12 மணி வரை படிப்பேன். அதேபோல் காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை. முதலிடத்தைப் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும், ஆசிரியர்களின் கடின உழைப்பாலும் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது என ஹரிணி தெரிவித்தார்.
முதல் வகுப்பில் இருந்தே அவர் இந்த பள்ளியில்தான் படித்து வருகிறார்.திருவொற்றியூரைச் சேர்ந்த ராமையா - மலர்க்கொடியின் மகள் ஹரிணி. ராமையா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மலர்க்கொடி பொன்னேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.முதலிடம் பெற்ற மாணவிக்கு அவர்ஸ்லேடி பள்ளியின் நிர்வாகி மேரிபுட்டியும், தலைமை ஆசிரியர் மார்கரெட்டும் பாராட்டு தெரிவித்தனர்.

இரண்டாவது இடம்

11 மாணவ-மாணவியர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர்.

அவர்கள் விவரம்,

1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்
2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி
3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி
4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்
5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை
8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி
9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை
10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை
11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை

மூன்றாவது இடம்

24 மாணவ-மாணயர் 500-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம்,

1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்
2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்
3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை
4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்
5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை
6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்
7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி
11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்
12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி
13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்
14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி
15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி
16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை
17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்
19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்
20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்
21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்
22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்
23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

அதிராம்பட்டினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.

இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - அல் ஜசீரா - 474 

இரண்டாம் இடம் - பாஹிமா  பாத்திமா - 473 

மூன்றாம் இடம் - வசீமா - 472

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - சகீரா - 482

இரண்டாம் இடம் - நபீஸா - 481

மூன்றாம் இடம் - மலர்விழி - 468 

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்.
  
முதலிடம் - ரியாசுதீன் - 459

இரண்டாம் இடம் - வின்சன்ட் பளித் பிரீடோ - 444

மூன்றாம் இடம் - ஷேக் அலாவுதீன் - 442



10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: செய்யாறு மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை

10 ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.

விருதுநகர், திருவண்ணாமலை, சென்னை, ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் இடத்தை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மதிப்பெண் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 494 மதிப்பெண்கள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மதிப்பெண்கள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500 க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் - 98, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் டொக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள், தமிழ் - 98, ஆங்கிலம் - 98, கணிதம் - 100, அறிவியல் -100, சமூக அறிவியல் - 100.
மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாரதிய வித்தியாபவன் மெட்ரிக். பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த மார்ச், ஏப்ரலில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில் நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்.

நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல் ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.