20/08/2011

மீண்டும் தடுமாறும் இந்தியா - ஷேவாக், டிராவிட் வந்த வேகத்தில் அவுட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வரும் 4 வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில்,

சற்று முனன்ர் வரை இந்தியா 17 ரன்களுக்கு 2 விக்கெட்டினை இழந்திருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 591 ரன்களுக்கு 6 விக்கெட்டினை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது.
இயென் பெல் அபாரமாக துடுப்பெடுத்தாடி தனது முதல் இரட்டைச்சதத்தை பூர்த்தி செய்தார். 235 ஒட்டங்களை அவர் எடுத்தார். இதில் 23 பவுன்றிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய பீட்டர்சன் 175 ஓட்டங்களை எடுத்தார். அதில் 27 பவுன்றிகள் அடங்கும்.

பந்துவீச்சில் சிறீசாந்த் 3 விக்கெட்டினையும், சுரேஷ் ரைனா 2 விக்கெட்டினையும் கைப்பற்றினர். பதிலுக்கு களமிறங்கியுள்ள இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செஷன் இடைவேளை வரை 17 ரன்களுக்கு 2 விக்கெட்டினை இழந்திருந்தது. லக்ஷ்மன் 2 ரன்களை மட்டும் எடுத்து, பிராட்டின் பந்துவீச்சில் ப்ரியொரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷேவாக் ஆண்டர்சனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ மூலம் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தின் ரன் குவிப்புக்கு மழை முட்டுக்கட்டை


லண்டன், ஆகஸ்ட் 20 : லண்டன் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன்கள் குவித்திருந்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
2 – வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 457 ரன்கள் எடுத்திருந்தது.
இயான் பெல் 181 ரன்களுடனும், ஆன்டர்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 20) தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஆன்டர்சன் மேலும் 10 ரன்கள் சேர்த்து 13 ரன்களுக்கு
ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மோர்கன் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து இயான் பெல்லுடன் ரவி போபரா ஜோடி சேர்ந்தார்.
நங்கூரம் பாய்ச்சியது போல் நின்று விளையாடிய இயான் பெல் 331 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
அவரது அபார ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 500 ரன்களை கடந்தது.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல் 235 ரன்களில் (364 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்ஸர்) சுரேஷ் ரெய்னா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
பின்னர் ரவி போபராவுடன் மேட் பிரையர் இணைந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன்கள் குவித்திருந்தது.

போபரா 44 ரன்களுடனும், பிரையர் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளும்,  சுரேஷ் ரெய்னா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவது தடைபட்டது.

SUMMERSLAM PART-08

SUMMERSLAM PART-07


SUMMERSLAM PART-06

SUMMERSLAM PART-05

SUMMERSLAM PART-04


பூனையின் சேட்டைகள்..........

                                                 CAT LISTENING TO SPB







                                                CAT LISTENING TO AR RAHMAN







                                                     CAT LISTENING TO DEVA




                                                CAT LISTENING TO HARIHARAN




                                              CAT LISTENING TO KARTHIK




                                                  CAT LISTENING TO YOU


எப்படி. . . .

இந்தியா அடைந்த தோல்வியை நினைவிலிருந்து அழிப்பது கடினம் – வாசிம் அக்ரம்

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 18 : டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விகளை இந்திய அணி  நினைவிலிருந்து அழிப்பது மிகவும் கடினம் என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

பிசிசிஐ இந்தத் தொடரிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்றால்  கிரிக்கெட் வாரியம் தன் நடைமுறைகளின் மீது உண்மையான ஆன்மப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா முதலிடத்தில் இருப்பது என்பது டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நாளைக்கு உயிர்வாழ உதவுவதாகும் என அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டுல்கர், டிராவிட், லஷ்மண், சேவாக்கிற்குப் பிறகு யார் என்பது இந்தியாவுக்கு ஒரு பெரிய கவலை என கூறியுள்ள,வாசிம் அக்ரம், சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, விராத்  கோலி போன்றோர்  இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் எனக் தெரிவித்தார்.
சேவாக் கடந்த டெஸ்ட் போட்டியில் அதிசயம் நிகழ்த்திக் காட்ட விரும்பி ஆடினார் – ஆனால் விளைவு இரண்டு இன்னிங்ஸ்களிலும் முதல் பால் டக் அவுட்டாகிவிட்டார் என அக்ரம் குறிப்பிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவு சுலபமானதல்ல – அதுவும் இங்கிலாந்து சூழ்நிலையில், 3 மாதங்களாக கிரிக்கெட் எதையும் ஆடாமல் நேராக டெஸ்டில் ஆடும்போது இன்னும் சற்று நேரம் களத்தில் செலவழித்திருக்கவேண்டும் – இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை – ஓவல் மைதானம் கிட்டத்தட்ட இந்திய மைதானங்களை  போன்றதுதான்  - இதில் சேவாக் தன் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கலாம் என்று அக்ரம் கூறினார்.