தேர்தல் தோல்வி - கருணாநிதி மகிழ்ச்சி
சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி தோல்வியின் மூலம் திமுகவின் அதிகார போட்டி முடிவுக்கு வந்துள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். கருணாநிதியின் புதல்வர்களான ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஆட்சியிலும், கட்சியில் நீயா நானா போட்டியில் ஸ்டாலினே இதுவரை முன்னனியில் இருந்து வந்தார். எனினும் இருவருடங்களுக்கு முன் கட்சியின் பொருளாளராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்ட ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் முதல்வாராக பதவியேற்பார் என்ற கருத்து நிலவி வந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அழகிரி, கட்சியில் தனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி வந்தார்.
இதனால் முதல்வர் குடும்பம் ஸ்டாலின் மற்றும் அழகிரி என பிரிந்து இருந்தது. மேலும் 2ஜி விவகாரத்தால் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி கொடுத்த நெருக்கடிகளும் முதல்வரால் சமாளிக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்தும், மகளை காப்பாற்ற முடியவில்லை என்ற அதிருப்தியில் ராஜாத்தி அம்மாளும், மகளை காப்பாற்றுவதற்கு கட்சியை அடகு வைக்கிறார் என அழகிரியும் ஸ்டாலினும், மறைமுகமான நெருக்கடிகளை கருணாநிதிக்கு கொடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன் பேட்டியளித்த கருணாநிதி, நடந்து முடிந்த சட்டமண்ற தேர்தலோடு கட்சி பணிக்கு திரும்ப போவதாக அறிவித்து இருந்தார். இதனால் திமுக ஆட்சியை பிடித்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என கட்சியினர் செய்திகளை வெளியிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த அழகிரி, திமுக ஆட்சியில் கருணாநிதி தான் மீண்டும் முதல்வர் என செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்தார். இதனால் மனம் வெறுத்து போன கருணாநிதி, தானே மீண்டும் முதல்வராக தொடர்வேன் என அறிவித்தார்.
தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடையே உள்ள அதிகார போட்டிக்கு தற்காலிக முற்றுபுள்ளி வந்துள்ளது. இதனால் கருணாநிதி உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருப்பார் என நம்பலாம்




