02/07/2011

டோல் கேட் வரி வசூலை கண்டித்து லாரி ஸ்ட்ரைக்

புதூர்பாண்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கவரி மையத்தில் வரி வசூல் செய்வதைக் கண்டித்து தூத்துக்குடியில் லாரி ஸ்ட்ரைக் இன்று துவங்கியது. இதன் காரணமாக துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

45பி தேசிய நெடுஞ்சாலை திருச்சியில் தொடங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் முடிவடைகிறது. 45பி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து திருச்சி வரையில் உள்ள சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரையிலான பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்படும் என்று சாலை பணியை மேற்கொண்ட நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுபோன்ற சுங்கசாவடிகள் மாநகர எல்லையில் இருந்து 15 கிமீ., அப்பால் தான் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி 7 கிமீ.,க்குள் இருப்பதால் சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

மேலும், சுங்கவரி மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நட த்துவது என்று லாரிஉரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு புதூர் பாண்டியபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி முன்பு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடியில் உள்ள 60சதவீத லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துணை ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்க!

துவையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமையும் வேலைநாள் என அறிவிப்பு வெளியிட்டிருப்பதை புதுவை கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும் என புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் த. அசோக் கூறியது: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் வருகிற செப்டம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்.

நிகழ் கல்வியாண்டில் பள்ளி வேலைநாள்கள் குறிப்பிட்ட அளவு எட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வித் துறை இம்மாதிரியான முடிவை எடுத்துள்ளது. இதற்கு பதிலாக காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே, சனிக்கிழமையில் பள்ளிக்கு வேலை நாள் என அறிவித்திருப்பதை புதுவை கல்வித் துறை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றார்.

மகேந்திரசிங் தோனி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் : சீறும் ஆஸ்திரேலியா

நடுவர் டரெல் ஹார்பெரை குறை கூறிய, இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
மே.இந்திய தீவுகளுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் டரெல் ஹார்பெரின் தீர்ப்புக்கள் தவறானது இந்திய அணித்தலைவர் தோனி விமர்சித்திருந்தார்.

'நடுவரின் தீர்ப்பு சரியானதாக இருந்திருக்கும் எனில் இந்த நேரம் நாம் ஹோட்டலில் இருப்போம்' என அவர் ஊடக செவ்வி ஒன்றின் போது தெரிவித்தார்.

இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும் மூன்றாவது டெஸ்டில் ஹார்பெர் விளையாட கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அவருக்கு மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

எனினும் அப்போட்டியுடன் அவர் ஓய்வு பெற எண்ணியிருந்தால் இவ்விடயம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை, டோனிக்கு கடும் கண்டனம் விடுத்துள்ளது. உண்மையான நிலவரப்படி, இந்திய அணிக்கு டரெல் ஹார்பெர் வழங்கும் தீர்ப்புக்களில் 96% வீதமானவை சரியானவையே. இது முன்னணி நடுவர்கள் வழங்கும் மிகச்சரியான தீர்ப்பு சராசரியை விட அதிகமானது என ஐசிச்யின் கிரிக்கெட் மேனர் டேவ் ரிசாட்சனும் தெரிவித்துள்ளார்.

உங்கள் இஸ்டத்துக்கு ஏற்றபடி கிரிக்கெட் வீரர்களையோ, அலல்து நடுவர்களையோ தெரிவு செய்ய முடியாது என ஹார்பெரின் நண்பர் டரெல் ஹேரும் தோனிக்கு கண்டனம் விடுத்துள்ளார்.

நடுவரின் தீர்ப்பு தவறானது எனில் அதை மீள் பரிசீலனை செய்யும் DRS முறைக்கு இன்னமும் இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் தவறு. நடுவரை குறை சொல்வதில் பயனேதும் இல்லை என ஆஸி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜெயவர்த்தன அதிரடி சதம் - இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 69 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மஹெல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் களமிறங்கினர்.

டில்ஷான் 9 ரன்களுக்குள் ஆட்டமிழந்த போதும், மஹெல ஜெயவர்த்தன அதிரடியாக 14 பவுன்றிகளுடன் 144 ரன்களை எடுத்தார்.

அவருடன் இனைந்த குமார் சங்ககார 69 ஓட்டங்களையும் அடுத்து களமிறங்கிய மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களை எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 309 ஓட்டங்களள எடுத்தது இலங்கை அணி.