22/07/2012

sk;s;f

lsmmlsm

29/12/2011

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி


மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில்  திங்கட்கிழமை தொடங்கியது.    

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  333 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அதிகபட்சமாக கோவன் 68 ரன்களும்பாண்டிங் 62 ரன்களும்சிடில் 41 ரன்களும் எடுத்தனர்.   

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி  282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  கடைசி 61 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சை சாமளிக்க முடியாமல் தனது மூன்று விக்கெட்டுகளை அவரது பந்து வீச்சில் இழந்தது.

துவக்கத்தில் ஆஸி. அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நின்றாலும்,  அதன் பிறகு ஜோடி சேர்ந்த பாண்டிங்கும் ஹஸ்ஸியும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த அணியின் ரன்கள் மெதுவாக உயர்ந்தது. 

சிறப்பாக ஆடிய பாண்டிங் முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஹஸ்ஸி இந்த இன்னிங்ஸில் தன் பங்கிற்கு அரை சதம் அடித்து அசத்தினார். 

சிறப்பாக விளையாடிய பாண்டிங் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.  ஹஸ்ஸி 79 ரன்களுடனும்,பேட்டின்சன் 3  ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.   இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹஸ்ஸி 89 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும். 

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு  தொடக்கமே ஆட்டம் கண்டது.

சேவாக் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹில்பெனாஸ் பந்தில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத காம்பீர் இந்த முறையும் சொதப்பினார். அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். 

அதன்பிறகு ஜோடி சேர்ந்த டிராவிட்-டெண்டுல்கர் ஜோடியும் நீடிக்கவில்லை. டிராவிட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்கதொடர்ந்து லட்சுமணன் 1 ரன்னிலும்கோக்லி ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இரண்டாவது இன்னிங்ஸிலாவது தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கரும் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சிடில் பந்து வீச்சில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  

ஒரு கட்டத்தில் இந்திய அணி 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும்அஸ்வினும் நிலைத்து நின்று பொறுமையாக  விளையாடினர்.  

ஆனால் அவர்களது கூட்டணியும் நிலைக்கவில்லை. கேப்டன் தோனி 23 ரன்களிலும்அஸ்வின் 30 ரன்களிலும் ஆட்டமிழக்கடெயிலெண்டர்களான ஜாகீர்கான் 13 ரன்களிலும்உமேஷ் யாதவ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 169 ரன்களில் முடிவுக்கு வந்தது.

இதனால் 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸி. அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளையும்பீட்டர் சிடில் மூன்று விக்கெட்டுகளையும்ஹில்பெனாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸி. அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது.

இந்த 2011- ம் ஆண்டில் தான் விளையாடிய கடைசி போட்டியை இந்திய அணி தோல்வியோடு முடித்திருக்கிறது. புத்தாண்டிலாவது இந்திய அணி வெற்றியோடு தொடங்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?


வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. மறுநாள் (26-ந்தேதி) அது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அது சென்னையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மிகத் தீவிரமாக வலுவடைந்து புயலாக மாறியது.

இதையடுத்து அந்த புயலுக்கு "தானே'' என்று இந்திய வானிலை ஆய்வுக் கழகம் பெயர் சூட்டியது. இந்த பருவ மழை சீசனில் உருவான இரண்டாவது புயல் இதுவாகும். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த தானே புயல் நேற்று மதியம் 500 கி.மீ. தொலைவுக்கு நெருங்கி வந்தது.

அந்த புயல் நகரும் திசையை கணித்த வானிலை ஆய்வாளர்கள்அது தமிழ்நாட்டின் கடலூருக்கும்ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என்று அறிவித்தனர். சென்னையை குறி வைத்து தானே புயல் நகர்ந்து வந்ததால்தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தது.

வழக்கமாக வங்கக்கடலில் உருவாகும் புயல் முதலில் மேற்கு நோக்கி தமிழ்நாட்டை குறிவைத்தே வரும். பிறகு பெரும்பாலும் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தை துவம்சம் செய்து விடும். தானே புயலின் நகர்தலும் அப்படித்தான் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தானே புயலின் நகரும் திசையில் நேற்று இரவு முதல் மாற்றம் ஏற்பட்டது. 400 கி.மீ. தொலைவில் அது வந்த போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அந்த புயல் முழுக்க - முழுக்க தமிழகத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் மெல்லமெல்ல நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை தமிழ்நாட்டை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை 7.30 மணிக்கு வானிலை மையம் அறிவித்துள்ள சிறப்பு தகவல் வருமாறு:-

தானே புயல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. அது இன்றிரவுக்குள் தமிழக கடற்கரையை மிகவும் நெருங்கி வந்து விடும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை தானே புயல் சென்னைக்கும் - நாகப்பட்டினத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும். அப்போது 105 கி.மீ. வேகத்தில் மிகமிக பயங்கரமான சூறாவளிக் காற்று வீசும்.

தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்தமிக பலத்த மழை பெய்யும்குளிர்காற்று தாங்க முடியாதபடி இருக்கும். கடலில் சீற்றமும்,கொந்தளிப்பும் காணப்படும். எனவே கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீனவர்கள் கடலோரத்தில் மீன் பிடிப்பதை கூட தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தானே புயல் தமிழக கடற்கரையை நெருங்கநெருங்க சூறைக்காற்று வேகம் அதிகரிக்கும். இன்றிரவு சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். கூரை வீடுகள்மின் கம்பங்கள்மரங்கள்பாதிக்கப்படலாம். இதை கருத்தில் கொண்டு மக்கள் இன்றிரவு மிகமிக உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 120 கி.மீ. வரை கூட இருக்கலாம். மழை 200 மி.மீ. அளவு வரை பெய்யலாம் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.